கல்லணையை "பற்றிய செய்தி குறிப்பு :-
கல்லும் களிமண்ணாலும் மட்டுமே கட்டியே அணை , காலம் கடந்தும் கரை பெருகி வரும் காவிரியை தடுத்து நிறுத்திக்கொண்டு இருக்கிறது . பண்டை தமிழரின் நுட்பத்தை பறைசாற்றுகிறது .
முதலாம் நூற்றாண்டில் ," சோழ மன்னன் கரிகாலன் "அவர்களால் கட்டப்பட்டது இந்த கல்லணை , இதை கட்டுவதற்கு அவர்கள் மேற்கொண்ட அறிவியல் நுட்பம் நம்மை வியக்கசெய்யும் , ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் .
அதாவது ,நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும் . அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதயும் . இதைத்தான் டெக்னாலஜியாக மாற்றினார்கள் அவர்கள் . காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் .
அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள் . நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு , படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை .
காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்திக் கழனிகளில் பாய்ச்சி செழிப்பை உண்டாக்கியதை பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை பாடல்களும், தெலுங்குச் சோழக்கல்வெட்டுகளும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன. மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையை கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப் படுகிறது.
கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 66 அடி உயரம் 18 அடி. இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது.
1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. சர். ஆர்தர் காட்டன், கரிகாலன் கட்டிய இக்கல்லணையை "மகத்தான அணை" (Grand Anicut) என்ற பெயர் சூட்டி அழைத்தார்.
கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும் .
கொள்ளிடம் ஆற்றின் அணை,
கொற்றவனின் புகழை பாடுகிறது !!!!
No comments:
Post a Comment